Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பழைய பஸ் ஸ்டாண்டில் கான்கிரீட் தளம் :தொடரும் அதிகாரிகளின் மெத்தனம்

பழைய பஸ் ஸ்டாண்டில் கான்கிரீட் தளம் :தொடரும் அதிகாரிகளின் மெத்தனம்

பழைய பஸ் ஸ்டாண்டில் கான்கிரீட் தளம் :தொடரும் அதிகாரிகளின் மெத்தனம்

பழைய பஸ் ஸ்டாண்டில் கான்கிரீட் தளம் :தொடரும் அதிகாரிகளின் மெத்தனம்

ADDED : செப் 08, 2011 10:07 PM


Google News
திருப்பூர் : திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை முடிக்கும் பணி மெத்தனமாக நடக்கிறது; மறுபகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி இன்னும் துவக்கப்படாமல் உள்ளது.

திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி, 3.06 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது. இதற்காக, கடந்த பிப்., மாதம் பஸ் ஸ்டாண்டின் ஒரு பகுதி அடைக்கப்பட்டு, மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட பஸ்கள் புதிய பஸ் ஸ்டாண்டுக்கும், சில வழித்தடங்களில் இயக்கப்படும் டவுன் பஸ்களுக்காக, மாநகராட்சி அலுவலகம் அருகிலும், தாராபுரம் ரோட்டிலும் தற்காலிகமாக ஸ்டாண்ட் உருவாக்கப்பட்டது.பஸ் ஸ்டாண்ட் பணிக்காக ஸ்டாப்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் அவதிப் பட்டு வருகின்றனர். குறுகிய ரோடு களில் பஸ்கள் திருப்பி விடப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால், பஸ் ஸ்டாண்ட் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தனம் காரணமாக பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன.ஒரு பகுதி பணிகள் நிறைவடைந் தும், மறுபகுதியில் பணிகளை துவக்குவது குறித்து அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். பணிகள் முடிவடைந்துள்ள பகுதியில் மக்கள் நடமாட்டம் உள்ளது; பஸ்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதில்லை. நகரில் ஏற்பட்டு வரும் வாகன போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, பணிகள் முடிந்த பகுதியில் பஸ்கள் நிறுத்தவும், மீதமுள்ள பகுதியில் உடனடியாக பணியை துவக்கி, வேக மாக முடிக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us