ADDED : செப் 08, 2011 03:38 AM
விழுப்புரம்:புதுச்சேரி வாலிபர் விழுப்புரம் அருகே ரயிலில் அடிப்பட்டு
இறந்து கிடந்தார்.புதுச்சேரி சண்முகாபுரம் நெசவாளர் குடியிருப்பு பகுதியை
சேர்ந்த ராமலிங்கம் மகன் ராமச்சந்திரன்,18.
இவர் அப்பகுதியில் உள்ள
பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணி புரிந்து வந்தார். இவர்
நேற்று மாலை 6.30 மணிக்கு விழுப்புரம் - முண்டியம்பாக்கம் இடையே உள்ள
தனியார் பொறியியல் கல்லூரி பின்புறமுள்ள தண்டவாள பகுதியில் ரயிலில்
அடிப்பட்டு மர்மான முறையில் இறந்து கிடந்தார்.தகவலறிந்த விழுப்பும் ரயில்வே
இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை
கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


