ADDED : ஆக 22, 2011 02:31 AM
மேலக்கால் : சோழவந்தான் அருகே மேலக்கால் பகுதியில் கஞ்சா மற்றும் மது
பாட்டில்கள் வைத்திருந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
காடுப்பட்டி
போலீசார் தென்கரை, கச்சிராயிருப்பு, மேலக்கால் பகுதிகளில் நேற்று முன்
தினம் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர். மேலக்கால் தெற்குத்தெருவில்
பெட்டிக்கடையில் ஒரு நபர் துணி பையுடன் இருந்தார். இன்ஸ்பெக்டர்
பாலமுருகன், எஸ்.ஐ., தேவா மற்றும் ஏட்டுக்கள் நாகலிங்கம், சதிஷ்வேல் அவரை
சோதனையிட்டனர். அவரிடமிருந்து 1.200 கிலோ கஞ்சா, 36 மது பாட்டிகள் இருந்தது
தெரிந்தது. அவர் காசிநாதன், 47, என தெரிந்தது. விக்கிரமங்கலம் ரோடு
பிரிவில் நின்ற செந்தில், 47, மற்றும் அவரது மனைவி ஒச்சம்மாள், 35, ஆகியோர்
போலீசை கண்டதும் பதுங்கினர். ஒச்சம்மாள் தப்பி விட்டார்.
செந்திலிடமிருந்து 40 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல்
செய்தனர்.சோழவந்தான் கரட்டுப்பட்டியில் பாலமுருகன், 23, என்பவரிடமிருந்து
36 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மூவரும் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டனர்.


