/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பூத்துக் குலுங்கும் "உன்னிமில்லு' பூக்கள்சுற்றுலாப் பயணிகள் கண்களுக்கு விருந்துபூத்துக் குலுங்கும் "உன்னிமில்லு' பூக்கள்சுற்றுலாப் பயணிகள் கண்களுக்கு விருந்து
பூத்துக் குலுங்கும் "உன்னிமில்லு' பூக்கள்சுற்றுலாப் பயணிகள் கண்களுக்கு விருந்து
பூத்துக் குலுங்கும் "உன்னிமில்லு' பூக்கள்சுற்றுலாப் பயணிகள் கண்களுக்கு விருந்து
பூத்துக் குலுங்கும் "உன்னிமில்லு' பூக்கள்சுற்றுலாப் பயணிகள் கண்களுக்கு விருந்து
ADDED : ஆக 04, 2011 02:15 AM
நாமக்கல்:கொல்லிமலை அடிவாரம் முதல், மலை உச்சி வரை, சாலையோரத்தில்
'உன்னிமில்லு' பூக்கள் பூத்துக் குலுங்குவது காண்போரின் கண்களுக்கு
விருந்து படைக்கும் வகையில் அமைந்துள்ளது.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை,
மூலிகை செடிகளுக்கு பெயர் போனாதாகும். அம்மலையை தலைமையிடமாகக் கொண்டு
கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆட்சி செய்து வந்தார் என்பது
மலையின் சிறப்பம்சமாகும். மலையின் அடிவாரம் முதல் உச்சி வரை, 70 கொண்டை ஊசி
வளைவுகள் உள்ளன.வாகனப் போக்குவரத்து வசதியாக சாலை உள்ளபோதிலும், அதன்
வழியாக வாகனத்தில் பயணிப்பது ஒருவித பரவசத்தை ஏற்படுத்தும். ஓங்கி உயர்ந்த
மலை, சில்லென வீசும் காற்று, பனி மூட்டம் போன்றவை மலைப்பாதையில்
பயணிக்கும்போது ஏற்படும் பரவசதுக்கான முக்கிய காரணமாகும்.
மலை வழிப்பாதையின் ஆங்காங்கே காண்பதற்கரிய பல்வேறு வண்ணம் கொண்ட மலர்கள்
பூத்துக் குலுங்கும். அவை, காண்போரின் கண்களுக்கு விருந்து படைக்கும்
வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, மலை வழிப்பாதையின் ஓரம் உள்ள செடிகளில்
'உன்னிமில்லு' எனும் பூக்கள் பூக்க ஆரம்பித்துள்ளது. 'லெண்டானா' என்பது
அப்பூவின் தாவரவியல் பெயராகும்.அவை, இயற்கை பொக்கே போல் அமைந்துள்ளது.
அம்மலர்களை வெறும் கண்ணால் காண்பதைக் காட்டிலும், 'கூலிங்கிளாஸ்' அணிந்து
பார்த்தால், அதன் அழகு நம்பை ஈர்க்கும் என, மலைவாழ் மக்கள்
தெரிவிக்கின்றனர். தற்போது, சீஸன் சமயம் என்பதால் மலைக்கு செல்லும்
சுற்றுலாப் பயணிகள், கொல்லிமலையில் பூத்துக் குலுங்கும் உன்னிமில்லு பூவைக்
கண்டு ரசிக்கலாம்.


