ADDED : அக் 05, 2011 12:49 AM
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கொலு கண்காட்சியை காலையிலும் பார்க்க முதன்முதலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதன்முறையாக அம்மன் வரலாறு மற்றும் ஆதிசங்கரர் வழிபாடு முறைகள் குறித்த கொலு பொம்மைகள் ரூ.3 லட்சம் செலவில் வைக்கப்பட்டுள்ளன. தினமும் மாலை அம்மன் கொலு அலங்காரம், சொற்பொழிவுகள், நாட்டியம் உட்பட கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. இன்று சிவபூஜை நடக்கிறது. நாளை விஜயதசமி அலங்காரத்துடன் விழா நிறைவடைகிறது. பக்தர்களின் வசதிக்காக, காலையிலும் கோயில் நடை திறந்திருக்கும் போது, கொலு கண்காட்சியை பார்க்கலாம் என நிர்வாக அதிகாரி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.


