Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நரிக்குறவர் காலனி பள்ளியில் அடிப்படை வசதியில்லாத அவலம்

நரிக்குறவர் காலனி பள்ளியில் அடிப்படை வசதியில்லாத அவலம்

நரிக்குறவர் காலனி பள்ளியில் அடிப்படை வசதியில்லாத அவலம்

நரிக்குறவர் காலனி பள்ளியில் அடிப்படை வசதியில்லாத அவலம்

ADDED : அக் 04, 2011 01:54 AM


Google News
புதுச்சேரி : லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியில் உள்ள பள்ளி கட்டடம், எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி உள்ளதால், ஆசிரியர்களும் மாணவர்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.லாஸ்பேட்டை விமான நிலைய பின் பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.

நரிக்குறவர்களின் பிள்ளைகள் கல்வி கற்க, அப் பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில முன் வந்ததால், வளர் கல்வித் திட்டத்திலிருந்து இரு ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அரை நாள் மட்டுமே பள்ளி இயங்கி வந்தது.கடந்த கல்வியாண்டு வரை மாற்றுப்பள்ளியாக (ஆல்டர்நேட்டிவ் ஸ்கூல்) இருந்த இப் பள்ளியை, நடப்புக் கல்வியாண்டில் முழுமையான அரசு துவக்கப் பள்ளியாக தரம் உயர்த்தி, துவக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர் முழு நேரப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.அஸ்பெஸ்டாஸ் ஷீட் வேயப்பட்ட கட்டடடத்தில் இப்பள்ளி இயங்கி வருகிறது. மின் இணைப்பு, குடிநீர், கழிப்பிடம், மாணவர்கள் அமர பெஞ்ச், மேசை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இப் பள்ளியில் இல்லை. வெயில் காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தால் ஆசிரியரும் மாணவர்களும் கட்டடத்தின் உள்ளே அமர முடியாமல் அவதிப்படுகின்றனர். அருகில் உள்ள மரத்தின் நிழலில்தான் வகுப்பு நடக்கிறது.மழை காலத்தில் வெளியில் அமர முடியாது. மின் விளக்கு வசதியில்லாத கட்டடத்திற்குள் அமர்ந்தால், வெளிச்சமின்மை காரணமாக, மாணவர்கள் எழுதவும் படிக்கவும் முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். காலை சிற்றுண்டியாக இப்பள்ளி மாணவர்களுக்கு பிஸ்கெட் மட்டுமே வழங்கப்படுகிறது; பால் வழங்கப்படுவதில்லை.பள்ளி கட்டடம் அமைந்துள்ள இடம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு சொந்தமானதாகும். இப்பள்ளிக்கு நிரந்தர கட்டடம் கட்ட திட்டமிட்டது. பள்ளி அமைந்துள்ள இடத்தை கல்வித் துறைக்கு மாற்றித் தருவது தொடர்பான பிரச்னையால், நிரந்தர கட்டடம் அமைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us