/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/வெள்ளை கழிச்சல் நோய் பரவலால் நாட்டுக்கோழிகள் பலி அதிகரிப்பு : விலை வீழ்ச்சியடையும் அபாயம்வெள்ளை கழிச்சல் நோய் பரவலால் நாட்டுக்கோழிகள் பலி அதிகரிப்பு : விலை வீழ்ச்சியடையும் அபாயம்
வெள்ளை கழிச்சல் நோய் பரவலால் நாட்டுக்கோழிகள் பலி அதிகரிப்பு : விலை வீழ்ச்சியடையும் அபாயம்
வெள்ளை கழிச்சல் நோய் பரவலால் நாட்டுக்கோழிகள் பலி அதிகரிப்பு : விலை வீழ்ச்சியடையும் அபாயம்
வெள்ளை கழிச்சல் நோய் பரவலால் நாட்டுக்கோழிகள் பலி அதிகரிப்பு : விலை வீழ்ச்சியடையும் அபாயம்
ADDED : அக் 08, 2011 10:51 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் தடுப்பூசி போடாத காரணத்தால் ஆயிரக்கணக்கான கோழிகள் இறந்து வருகின்றன.
இதனால் நாட்டுக்கோழிகளின் விலை வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. கால்நடை மருத்துவமனையில் கோழிகளுக்கு வாரந்தோறும் தடுப்பூசி போடப்பட்டு வந்தநிலையில், கடந்த இரண்டு மாதங்களாக தடுப்பூசி (ஆர்.டி.வி.கே.,) போடுவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் பரவி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துள்ளன. 5 ஆயிரத்திற்கும் அதிகமான கோழிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கால்நடை டாக்டர் ஒருவர் கூறுகையில், ''தமிழ்நாடு முழுவதும் தற்போது தடுப்பூசி வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. கடைகளிலும் கிடைக்கவில்லை, என்றார். நோய் தாக்கிய கோழிகளை கிடைத்த விலைக்கு சிலர் விற்று வருகின்றனர். எனவே கோழி பிரியர்கள் உஷாராக இருக்க வேண்டும். முதுனாள் பகுதியை சேர்ந்த நாட்டு கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள கணேசன் கூறுகையில், ''ஒரு நாட்டு கோழி 450 முதல் 600 ரூபாய் விலை போகிறது. நோய் தாக்குதல் தகவல் பரவும்பட்சத்தில், நாட்டு கோழி விலை வீழ்ச்சியடைய வாய்ப்பு உள்ளது,'' என்றார்.


