/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோ விபத்து புளியங்குடியில் போதை டிரைவர் மீது வழக்குகுழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோ விபத்து புளியங்குடியில் போதை டிரைவர் மீது வழக்கு
குழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோ விபத்து புளியங்குடியில் போதை டிரைவர் மீது வழக்கு
குழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோ விபத்து புளியங்குடியில் போதை டிரைவர் மீது வழக்கு
குழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோ விபத்து புளியங்குடியில் போதை டிரைவர் மீது வழக்கு
புளியங்குடி : புளியங்குடி அருகே குடி போதையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோ, பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.புளியங்குடியை அடுத்த சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து நேற்று மதியம் பயணிகள் ஆட்டோ சுமார் 20க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ரத்தினபுரி நோக்கி வந்தது.
இதனால் பள்ளி குழந்தைகள் சத்தம் போட்டனர். குழந்தைகளின் சத்தம் கேட்டு அக்கம்பக்த்தில் உள்ளவர்கள் ஓடி பள்ளி குழந்தைகளை பத்திரமாக ஆட்டோவில் இருந்து மீட்டனர். பின்னர் இதுகுறித்து புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் தங்கராஜ் போதையில் ஆட்டோ ஓட்டியதுடன் அதிகமான பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோ டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.புளியங்குடி பகுதியில் விதிமுறைகளை மீறி, அளவுக்கு அதிகமாக ஆட்டோவில் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் அவலநிலை தொடர்ந்து வருகிறது. விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன் இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


