/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கல்லூரிகளுக்கிடையேயான கபடி போட்டி கடலூர் செயின்ட் ஜோசப் அணி சாம்பியன்ஷிப்கல்லூரிகளுக்கிடையேயான கபடி போட்டி கடலூர் செயின்ட் ஜோசப் அணி சாம்பியன்ஷிப்
கல்லூரிகளுக்கிடையேயான கபடி போட்டி கடலூர் செயின்ட் ஜோசப் அணி சாம்பியன்ஷிப்
கல்லூரிகளுக்கிடையேயான கபடி போட்டி கடலூர் செயின்ட் ஜோசப் அணி சாம்பியன்ஷிப்
கல்லூரிகளுக்கிடையேயான கபடி போட்டி கடலூர் செயின்ட் ஜோசப் அணி சாம்பியன்ஷிப்
ADDED : ஜூலை 27, 2011 11:14 PM
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில் பி.பி.ஜெ., கல்லூரியில் நடந்த கபடி போட்டியில் கடலூர் அணிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்தன.ஸ்ரீமுஷ்ணம் பி.பி.ஜெ., கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளுக்கிடையேயான கபடி போட்டி நடந்தது.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றன. கடலூர் செயின்ட்ஜோசப் கல்லூரி அணி முதலிடம் பெற்று வெற்றி பெற்றது. 2ம் இடத்தை கடலூர் பெரியார் கலைக் கல்லூரி அணியும், கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ் கல்லூரி 3ம் இடத்தையும், விருத்தாசலம் ராமதாசு கல்லூரி 4ம் இடத்தையும் பிடித்தனர்.வெற்றி பெற்ற அணிகளுக்கு பி.பி.ஜெ., கல்லூரி நிறுவனர் பத்மநாபன் கோப்பை வழங்கினார். கல்லூரி நிர்வாகி பிரகாஷ், முதல்வர் தெய்வநாயகம், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் கவாஸ்கர், ரமேஷ் பங்கேற்றனர்.