ஸ்ரீ ராஜீவ்காந்திபாலிடெக்னிக் வெற்றி
ஸ்ரீ ராஜீவ்காந்திபாலிடெக்னிக் வெற்றி
ஸ்ரீ ராஜீவ்காந்திபாலிடெக்னிக் வெற்றி
ADDED : ஆக 04, 2011 01:54 AM
சென்னிமலை: மண்டல கபடிப் போட்டியில் ஸ்ரீராஜீவ்காந்தி பாலிடெக்னிக் வெற்றி
பெற்றது.மாவட்ட கபடிக் கழகம் சார்பாக, மைலாடி ஸ்ரீ ராஜீவ்காந்தி
பாலிடெக்கினிக் கல்லூரியில் மண்டல அளவிலான கபடி போட்டி நடந்தது.
பெண்கள்
பிரிவில் 20 அணிகள் பங்கேற்றன. இதில் நவரசம் கல்லூரி அணி முதல் பரிசு,
கரிகாலன் அணி இரண்டாவது பரிசு, கோபி ஸ்ரீ வித்யாலயா அணி மூன்றாம் பரிசு
பெற்றன.ஆண்கள் பிரிவில், 40 அணிகள் பங்கேற்றன. இதில், ஸ்ரீராஜீவ்காந்தி
பாலிடெக்னிக் கல்லூரி அணி முதல் பரிசு, பவானி எஸ்.கே.சி., அணி இரண்டாவது
பரிசு, வெள்ளோடு மனமகிழ் மன்றம் அணி மூன்றாம் பரிசு பெற்றன.ஈரோடு கிழக்கு
எம்.எல்.ஏ., சந்திரகுமார் பரிசு வழங்கினார். ஸ்ரீ ராஜீவ்காந்தி
பாலிடெக்னிக் தாளாளர் மக்கள் ராஜன் தலைமை வகித்தார். முதல்வர் லோகமூர்த்தி
வரவேற்றார். மாவட்ட கபடிக் கழகத் தலைவர் சுப்பிரமணியம், துணைத் தலைவர்
அன்பு, நடுவர் குழு கன்வீனர் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் மகா அரசு நன்றி கூறினார்.


