ADDED : ஆக 03, 2011 11:03 PM
வால்பாறை : முடீஸ் பகுதியில் புதிய மின் வாரிய அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது.
முடீஸ் பகிர்மான பிரிவுக்கு உட்பட்ட நல்லகாத்து, தோணிமுடி, கல்லார், சோலையார், ஆனைமுடி, ஹைபாரஸ்ட், தாய்முடி, வாகமலை, கெஜமுடி, முத்துமுடி உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளை சேர்ந்த மின்நுகர்வோர், வால்பாறை டவுன் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை பயன்படுத்தி வந்தனர். தற்போது முடீஸ் பகுதி மக்களின் நலன் கருதி முடீஸ் பஜார் பகுதியிலேயே மின்வாரிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதை முடீஸ் மின்சார வாரிய இளமின்பொறியாளர்(வினியோகம்) ஜெயக்குமார் தலைமையில் உதவி செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் திறந்து வைத்தார். 'முடீஸ் பகுதியை சேர்ந்த மின்நுகர்வோர்கள் இந்த அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்' என்று மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


