/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தேர்தல் பணியாற்றும் ஊழியர்கள் தபால் ஓட்டு பெறுவதில் குழப்பம்தேர்தல் பணியாற்றும் ஊழியர்கள் தபால் ஓட்டு பெறுவதில் குழப்பம்
தேர்தல் பணியாற்றும் ஊழியர்கள் தபால் ஓட்டு பெறுவதில் குழப்பம்
தேர்தல் பணியாற்றும் ஊழியர்கள் தபால் ஓட்டு பெறுவதில் குழப்பம்
தேர்தல் பணியாற்றும் ஊழியர்கள் தபால் ஓட்டு பெறுவதில் குழப்பம்
ADDED : அக் 07, 2011 10:33 PM
விருதுநகர் : தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டுக்கள் பெறுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தபால் ஓட்டுக்காக, குடியிருப்பு பகுதியில் உள்ள தேர்தல் அலுவலரிடம் படிவம் 15 நிரப்பி, விண்ணப்பிக்க வேண்டும்.
நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி பகுதியில் உள்ளவர்கள் வார்டு கவுன்சிலர், தலைவர், மேயர் என இரண்டு ஓட்டுகள் போட வேண்டும். இவர்களுக்கு படிவம் 15 இரண்டுவாங்கி நிரப்பி வழங்க வேண்டும். ஊராட்சி பகுதியில் வசிப்பவர்கள் ஊராட்சி வார்டு உறுப்பினர், தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என நான்கு ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும் என்பதால், படிவம் 15 நான்கு வாங்கி நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும், என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. தேர்தல் பணியில் இருப்பவர்களோ ஒரு வாக்காளருக்கு எதற்கு நான்கு படிவம் என கேள்வி எழுப்புவதால், தபால் ஓட்டுக்கள் பெறுவதில் குழப்பம் அதிகரித்துள்ளது.


