சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும் நாகையில் அமைச்சர் கோகுல இந்திரா தகவல்
சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும் நாகையில் அமைச்சர் கோகுல இந்திரா தகவல்
சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும் நாகையில் அமைச்சர் கோகுல இந்திரா தகவல்
ADDED : ஜூலை 27, 2011 01:28 AM
சீர்காழி:''வெளி மாநிலங்களுக்கு நிகராக, தமிழக சுற்றுலாத் தலங்கள்
மேம்படுத்தப்படும்'' என சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா கூறினார்.
நாகை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், சீர்காழி அருகே
திருவாளியில், தூர்வாரப்பட்டுள்ள ஏரியைப் பார்வையிட்டார்.பின், பூம்புகார்
சுற்றுலாத்தலத்தை மேம்படுத்துவது தொடர்பாக, அதிகாரிகளுடன் ஆலோசனை
நடத்தினார். தொடர்ந்து, தரங்கம்பாடியில், 3 கோடியே 73 லட்ச ரூபாய் செலவில்
நடைபெறும், வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டு
துரிதப்படுத்தினார்.திருக்கடையூரில், 75 லட்ச ரூபாய் மதிப்பில்
அமைக்கப்பட்ட பூங்கா மற்றும் தங்கும் விடுதி, கழிப்பறை ஆகியவற்றைப்
பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.அப்போது, அமைச்சர் கூறுகையில், 'வெளி
மாநிலங்களுக்கு நிகராக, தமிழக சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும்.
அதற்காக முதல்வர் உத்தரவின்படி, திருவாளி ஏரி, பூம்புகார் சுற்றுலாத்
தலங்கள், திருக்கடையூர் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். இது
தொடர்பாக முதல்வரிடம் அறிக்கை அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'
என்றார்.அமைச்சருடன் சுற்றுலாத்துறை ஆணையர் மோகன்தாஸ், செயலர் ஜெயகொடி,
கலெக்டர் முனுசாமி, ஆர்.டி.ஒ., ரத்தினசாமி, மயிலாடுதுறை எம்.பி., ஓ.எஸ்.,
மணியன், சீர்காழி எம்.எல்.ஏ., சக்தி, பூம்புகார் எம்.எல்.ஏ.,பவுன்ராஜ்
உள்ளிட்டோர் வந்திருந்தனர்.