/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அனைவருக்கும் கல்வி திட்டத்தில் 113 பள்ளிகளுக்கு மானிய தொகைஅனைவருக்கும் கல்வி திட்டத்தில் 113 பள்ளிகளுக்கு மானிய தொகை
அனைவருக்கும் கல்வி திட்டத்தில் 113 பள்ளிகளுக்கு மானிய தொகை
அனைவருக்கும் கல்வி திட்டத்தில் 113 பள்ளிகளுக்கு மானிய தொகை
அனைவருக்கும் கல்வி திட்டத்தில் 113 பள்ளிகளுக்கு மானிய தொகை
ADDED : ஆக 02, 2011 12:54 AM
சின்னசேலம் : சின்னசேலத்தில் பள்ளிகளுக்கு மானியம் மற்றும் உபகரணங்கள்
வழங்கும் விழா நடந்தது.சின்னசேலம் வட்டார வள மையத்தில் நடந்த விழாவிற்கு
மேற்பார்வையாளர் பானுமதி தலைமை தாங்கினார். அனைவருக்கும் கல்வி இயக்கம்
சார்பில் பள்ளிகளுக்கான மானியம் மற்றும் கற்கும் பாரதம் திட்ட உபகரணங்களை
அரசு கொறடா மோகன், எம்.எல்.ஏ., அழ குவேல்பாபு வழங்கினர்.நிகழ்ச்சியில் 113
பள்ளிகளுக்கு மானிய தொகையாக 14 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மற்றும் கற்கும்
பாரதம் மூலம் தையல் மிஷின் உள்ளிட்ட உபகரணங்கள் மைய
ஒருங்கிணைப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் ஆசிரியர் பயிற்றுனர்கள்
ஞானவேல், வேல் முருகன், மாரிமுத்து, முத்தையன் மற்றும் சிறப்பு
பயிற்றுனர்கள் ஹரிதாஸ்,
செல்வராஜ் கலந்து கொண்டனர்.