/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/பேச்சிப்பாறை அணையில் ஷட்டர் சீரமைப்பு பணி துவக்கம்பேச்சிப்பாறை அணையில் ஷட்டர் சீரமைப்பு பணி துவக்கம்
பேச்சிப்பாறை அணையில் ஷட்டர் சீரமைப்பு பணி துவக்கம்
பேச்சிப்பாறை அணையில் ஷட்டர் சீரமைப்பு பணி துவக்கம்
பேச்சிப்பாறை அணையில் ஷட்டர் சீரமைப்பு பணி துவக்கம்
ADDED : ஆக 25, 2011 01:57 AM
திற்பரப்பு : பேச்சிப்பாறை அணையில் ஷட்டர்கள் சீரமைக்க 9 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கிறது.
குமரி மாவட்டத்தின் முக்கிய ஜீவாதாரமான பேச்சிப்பாறை அணை கட்டப்பட்டு நூறு ஆண்டுகள் கடந்த பின்பும் கம்பீரத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது சிறிய அளவிலான பராமரிப்பு பணிகள் பொதுப்பணித்துறை வாயிலாக செய்யப்படுகிறது. மறுகால் மதகுகளில் சில ஷட்டர்களும், கால்வாய் மதகு ஷட்டர் ஒன்றிற்கும் சில பாதிப்புகள் இருந்து வந்தது. இதனால் அனைத்து ஷட்டர்கள் வழியாக தண்ணீர் வெளியேற்ற முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் அரசு சார்பில் 9 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஷட்டர் பராமரிப்பு பணிகள் துவங்கியது. முதலாவதாக கால்வாய் தலை மதகு ஷட்டரில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. ஷட்டர் உயர்த்துவதற்கான றோப் மற்றும் ஷட்டர் ரப்பர் சீல் போன்றவை மாற்றும் பணிகள் நடக்கிறது. தொடர்ந்து மறுகால் மதகு ஷட்டர்களிலுள்ள சானல் மற்றும் கேஜ் பிளேட் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். ஷட்டர் பராமரிப்பு பணிகள் ஒரு மாதம் வரை நீடிக்கும் என கருதப்படுகிறது. பொதுப்பணித்துறை முதன்மை இன்ஜினியர் சுப்ரமணியம் பணிகளை பார்வையிட்டார். உதவி இன்ஜினியர் ஆனந்தகுமார், அணை கண்காணிப்பாளர் அகஸ்டின் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.


