சன் குழும இயக்குனர்களில் ஒருவரானஉதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜினாமா
சன் குழும இயக்குனர்களில் ஒருவரானஉதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜினாமா
சன் குழும இயக்குனர்களில் ஒருவரானஉதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜினாமா
ADDED : அக் 11, 2011 11:25 PM
சென்னை:சென்னை ஐகோர்ட்டில், மத்திய அரசு சார்பில் ஆஜராகும் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன், பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பியுள்ளார்.சன், 'டிவி' அலுவலகத்தில் நேற்று முன்தினம் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சன் குழுமத்தின் இயக்குனர்களில் ஒருவராக வழக்கறிஞர் ரவீந்திரன் உள்ளார். இவர் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்தார்.மத்திய அரசு சார்பில், ஐகோர்ட்டில் ஆஜராகி வந்தார். உதவி சொலிசிட்டர் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்வதாக, மத்திய சட்டத் துறைக்கு வழக்கறிஞர் ரவீந்திரன் கடிதம் அனுப்பியுள்ளார்.