/உள்ளூர் செய்திகள்/மதுரை/அரை மணி நேர மழைக்கு தாங்காத ரோடுகள் :தி.மு.க., மீது விஜயகாந்த் குற்றச்சாட்டுஅரை மணி நேர மழைக்கு தாங்காத ரோடுகள் :தி.மு.க., மீது விஜயகாந்த் குற்றச்சாட்டு
அரை மணி நேர மழைக்கு தாங்காத ரோடுகள் :தி.மு.க., மீது விஜயகாந்த் குற்றச்சாட்டு
அரை மணி நேர மழைக்கு தாங்காத ரோடுகள் :தி.மு.க., மீது விஜயகாந்த் குற்றச்சாட்டு
அரை மணி நேர மழைக்கு தாங்காத ரோடுகள் :தி.மு.க., மீது விஜயகாந்த் குற்றச்சாட்டு
ADDED : அக் 06, 2011 04:12 AM
மதுரை : ''மாநகராட்சி பகுதிகளில் அரை மணி நேரம் மழை பெய்தால், தாங்காத அளவிற்கு ரோடுகள் மோசமாக உள்ளது.
இதை கூட கடந்த ஆட்சியில் சரிசெய்ய தி.மு.க.,வினரால் முடியவில்லை,'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.தே.மு.தி.க., வேட்பாளர்களை ஆதரித்து மதுரை செல்லூரில் அவர் பேசியதாவது: மதுரையில் அரை மணி நேரம் மழை பெய்த மழையால், பீ.பி.குளம், செல்லூர் ரோடுகளை கடந்து வரமுடியவில்லை. ரோடுகள் தாங்காத அளவிற்கு எங்கும் தண்ணீர். இவற்றை கூட சரி செய்ய முடியதாவர்களுக்காக நீங்கள் ஓட்டு போடப்போறீர்கள். இதே நிலை தான் திருநெல்வேலி, சென்னை மாநகராட்சிகளில் உள்ளது.நாங்கள் 40, 60,100 ஆண்டுகளான கட்சிகள் என, மக்களிடம் கொள்ளை அடித்த கட்சிகளாக உள்ளன. மார்க்சிஸ்ட் கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். எங்கள் வேட்பாளர்கள் லஞ்சம் வாங்க மாட்டார்கள். வாங்கவும் விடமாட்டேன். பணத்திற்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு நான் அரசியலுக்கு வரவில்லை. சுத்தமான, சுகாதாரமான மாநகராட்சியாக மதுரை அமைவதற்கு தே.மு.தி.க., வேட்பாளருக்கு வாய்ப்பளியுங்கள், என்றார். தே.மு.தி.க., மற்றும் மார்க்சிஸ்ட் கவுன்சிலர் வேட்பாளர்கள், எம்.எல்.ஏ., சுந்தர்ராஜன் மற்றும் பலர் பங்கேற்றனர்.


