/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலூர் சிறைக் கைதி விழுப்புரம் அருகே ஓட்டம்கடலூர் சிறைக் கைதி விழுப்புரம் அருகே ஓட்டம்
கடலூர் சிறைக் கைதி விழுப்புரம் அருகே ஓட்டம்
கடலூர் சிறைக் கைதி விழுப்புரம் அருகே ஓட்டம்
கடலூர் சிறைக் கைதி விழுப்புரம் அருகே ஓட்டம்
ADDED : செப் 30, 2011 01:49 AM
கடலூர் : விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லும்போது தப்பியோடிய மத்திய சிறைக் கைதியை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ், 29. விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த வழிப்பறி வழக்கில் தொடர்புடைய இவரை, போலீசார் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அரக்கண்டநல்லூரில் நடந்த வழிப்பறி வழக்கு தொடர்பாக சங்கராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்த அந்தோணிராஜை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் சங்கராபுரம் காமராஜ், மூங்கில்துறைப் பட்டு தேவநாதன் ஆகியோர் கடலூர் மத்திய சிறையில் இருந்து நேற்று முன்தினம் காரில் அழைத்துச் சென்றனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, அந்தோணிராஜை அழைத்துக் கொண்டு போலீசார் அன்றிரவு கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். மடப்பட்டு அருகே வந்த போது, சிறுநீர் கழித்து விட்டு வருவதாக அந்தோணிராஜ் கூறியதும் அவரை போலீசார் காரில் இருந்து இறக்கி விட்டனர். காரில் இருந்து இறங்கிய அந்தோணிராஜ் திடீரென கண் இமைக்கும் நேரத்தில் தப்பியோடிவிட்டார். போலீசார் துரத்திச் சென்றும் பிடிக்க முடிய வில்லை. இது குறித்து திருநாவலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இரவில் கைதி தப்பி யோடிய சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியது.


