Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மாற்றுத்திறனாளிகள் திருமண நிதி உதவிபெறும் முறை: மாவட்ட கலெக்டர் தகவல்

மாற்றுத்திறனாளிகள் திருமண நிதி உதவிபெறும் முறை: மாவட்ட கலெக்டர் தகவல்

மாற்றுத்திறனாளிகள் திருமண நிதி உதவிபெறும் முறை: மாவட்ட கலெக்டர் தகவல்

மாற்றுத்திறனாளிகள் திருமண நிதி உதவிபெறும் முறை: மாவட்ட கலெக்டர் தகவல்

ADDED : செப் 09, 2011 01:29 AM


Google News
நாமக்கல்: 'மாற்றுத்திறனாளிகள் திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்' என, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழக அரசு உத்தரவுப்படி, 2011-2012ம் நிதி ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றி அமைக்கப்பட்ட திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.திட்டத்தில், பட்டம் அல்லது பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, அதே தொகையில் தேசிய சேமிப்பு பத்திரமும், திருமண நிதி உதவித் தொகையாக, 50 ஆயிரம் ரூபாய், 4 கிராம் தங்கமும் வழங்கப்படும்.பட்டம், பட்டயம் பெறாத பயனாளிகளுக்கு, 12 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலை, அதே தொகை மதிப்பிலான தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் 4 கிராம் தங்கமும் வழங்கப்படும். ஒரு கை அல்லது கால் இழந்தோர், காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ளவர்கள் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்தவர்களாக கருதப்படுவர்.

அதுபோல், பார்வையற்ற, மாற்றுத் திறனாளியை திருமணம் செய்து கொள்ள விரும்பும் பார்வை உள்ளவர்கள் இத்திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்தவர்களாக கருதப்படுவர். மாற்றியமைக்கப்பட்ட திருமண உதவி திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள், நிபந்தனைக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.அதன்படி, பெண், 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை. முதல் திருமணமாக இருக்க வேண்டும். அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். பட்டயம், இளங்கலை பட்டப்படிப்பு படித்த பெண்ணுக்கு திருமண உதவித்தொகை, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். திருமணத்துக்கு முன் விண்ணப்பம் செய்ய வேண்டும்.வேறு எந்த திட்டத்திலும் திருமண நிதி உதவி தொகை பெற்றிருக்கக் கூடாது. முன்னுரிமை பட்டியல் முறைப்படி உதவித் தொகை வழங்கப்படும். ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் திருமண நிதி உதவித் தொகை, நான்கு கிராம் தங்கம் வழங்கப்படும். திட்டத்தின் கீழ் உதவி பெற, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us