/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கல்யாணசுந்தரத்தை அமைச்சராக கைது செய்தால் புதுச்சேரிக்குப் பெரும் தலைக்குனிவு: வைத்திலிங்கம்கல்யாணசுந்தரத்தை அமைச்சராக கைது செய்தால் புதுச்சேரிக்குப் பெரும் தலைக்குனிவு: வைத்திலிங்கம்
கல்யாணசுந்தரத்தை அமைச்சராக கைது செய்தால் புதுச்சேரிக்குப் பெரும் தலைக்குனிவு: வைத்திலிங்கம்
கல்யாணசுந்தரத்தை அமைச்சராக கைது செய்தால் புதுச்சேரிக்குப் பெரும் தலைக்குனிவு: வைத்திலிங்கம்
கல்யாணசுந்தரத்தை அமைச்சராக கைது செய்தால் புதுச்சேரிக்குப் பெரும் தலைக்குனிவு: வைத்திலிங்கம்
புதுச்சேரி : கல்யாணசுந்தரம் அமைச்சராக இருக்கும்போதே போலீசார் அவரை கைது செய்தால் புதுச்சேரிக்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்திவிடும் என்று காங்., நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது அமைச்சரை கைது செய்வதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அவர் அமைச்சர் பதவியில் நீடிப்பதற்கு தகுதியில்லை. கல்யாணசுந்தரம் அமைச்சராக இருக்கும் போதே அவரை போலீசார் கைது செய்தால் புதுச்சேரிக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்திவிடும். இதனால் அவரை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். அமைச்சர் ஆள்மாறாட்டம் செய்த விவகாரம் புதுச்சேரி மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பரவிவிட்டது. இவ்வளவு பிரச்னை நடந்தும் அமைச்சர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது, ஏதோ உள்நோக்கம் மற்றும் பின்னணி உள்ளதாக தெரிகிறது. இதனால் புதுச்சேரிக்குப் பெரிய அவமானம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால், நாங்கள் கவர்னர் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனு கொடுத்துள்ளோம். இதேபோல் உள்துறை அமைச்சகத்திற்கும் மனு அனுப்பியுள்ளோம். மனுவை வாங்கிக்கொண்ட கவர்னர் இதுகுறித்து முதல்வரிடம் விளக்கம் கேட்பதாக தெரிவித்தார். முதல்வரிடமிருந்து விளக்கம் கிடைக்காத பட்சத்தில், கவர்னரே ஜனாதிபதிக்கும் , உள்துறை அமைச்சகத்திற்கும் பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


