விசைத்தறியாளர்கள் உண்ணாவிரத முடிவு
விசைத்தறியாளர்கள் உண்ணாவிரத முடிவு
விசைத்தறியாளர்கள் உண்ணாவிரத முடிவு
ADDED : செப் 07, 2011 01:51 AM
ஈரோடு: அனைத்து விசைத்தறி கூட்டுறவு நெசவாளர்களின் பட்டினி சாவை தடுக்க கோரி, ஈரோடு மாவட்ட விசைத்தறி நெசவாளர் கூட்டமைப்பு சார்பில், ஈரோட்டில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
விசைத்தறி கூட்டுறவு சங்க நெசவாளர்களின் நலனைக் கருத்திக் கொண்டு, ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். வரும் ஆண்டு தை பொங்கலுக்கு அரசு வழங்கும், இலவச வேட்டி, சேலை உற்பத்தி பணியை கூட்டுறவு சங்கங்களுக்கே வழங்க வேண்டும். வெளி மாநிலத்தில் இருந்து இலவச வேட்டி, சேலைகளை கொள்முதல் செய்வதாக அறிவித்த, கைத்தறித் துறை இயக்குனர் உமா சங்கரின் முடிவை எதிர்த்தும், இலவச வேட்டி சேலை திட்டத்துக்கான பாவு மற்றும் ஊடை நூல்களை முன்கூட்டியே, விசைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க கோரியும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈரோடு வீரப்பன் சத்திரம் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். பொருளாளர் அசோகன் மற்றும் பலர் பங்கேற்றனர்.


