/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சேதமடைந்த குப்பை கன்டெய்னர்களால் நெல்லையில் சுகாதாரக்கேடு பிரச்னைசேதமடைந்த குப்பை கன்டெய்னர்களால் நெல்லையில் சுகாதாரக்கேடு பிரச்னை
சேதமடைந்த குப்பை கன்டெய்னர்களால் நெல்லையில் சுகாதாரக்கேடு பிரச்னை
சேதமடைந்த குப்பை கன்டெய்னர்களால் நெல்லையில் சுகாதாரக்கேடு பிரச்னை
சேதமடைந்த குப்பை கன்டெய்னர்களால் நெல்லையில் சுகாதாரக்கேடு பிரச்னை
ADDED : ஆக 04, 2011 01:30 AM
திருநெல்வேலி : நெல்லையில் பழுதடைந்த குப்பை கன்டெய்னர்களை உடனுக்குடன் மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நெல்லையில் மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே குப்பை கன்டெய்னர்கள் வைக்கப்பட்டுள்ளன.
கன்டெய்னர்களில் சேகரமாகும் குப்பைகள் உடனுக்குடன் லாரிகளில் அள்ளி குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. குப்பை கன்டெய்னர்கள் துரு பிடித்து உடைந்து சேதமடைந்ததும்... அதே இடத்தில் வேறு கன்டெய்னர்கள் வைக்கப்படுகிறது.நெல்லையில் புதிய கன்டெய்னர்கள் வைக்கப்பட்ட பல இடங்களில் பழைய சேதமடைந்த குப்பை கன்டெய்னர்கள் மாற்றப்படாமல் உள்ளன. இதனால் சேதமடைந்த கன்டெய்னரிலும் பலர் குப்பைகளை வீசுகின்றனர். குப்பைகள் ரோட்டில் கொட்டி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. சி.என். கிராமம் ரயில்வே கேட் அருகே சேதமடைந்த கன்டெய்னரில் குப்பைகள் போடப்பட்டுள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.சேதமடைந்த கன்டெய்னர்களை உடனுக்குடன் மாற்றினால் அவற்றை விற்பனை செய்வதன் மூலம் மாநகராட்சி வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது, சேதமடைந்த கன்டெய்னர்கள் தொடர்ந்து ரோட்டில் கிடந்தால் யாராவது அவற்றை எடுத்துச்செல்வர், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும், கன்டெய்னர் எண்ணிக்கை விபரங்களை சரிவர பராமரிக்க இயலாத நிலை ஏற்படும், பழைய குப்பை கன்டெய்னர்களை உடனுக்குடன் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கூறுகின்றனர்.


