/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/காலி குடங்களுடன் மக்கள் திடீர் மறியல்காலி குடங்களுடன் மக்கள் திடீர் மறியல்
காலி குடங்களுடன் மக்கள் திடீர் மறியல்
காலி குடங்களுடன் மக்கள் திடீர் மறியல்
காலி குடங்களுடன் மக்கள் திடீர் மறியல்
ADDED : அக் 06, 2011 09:40 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில், சரிவர
தண்ணீர் வினியோகிக்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியலில்
ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி அடுத்த சூளேஸ்வரன்பட்டி
பேரூராட்சிக்குட்பட்ட காந்திபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் ஒருவாரமாக
குடிநீர் சரிவர வினியோகிக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள்
காலி குடங்களுடன் நேற்று காலை 10.00 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'சூளேஸ்வரன்பட்டியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு,
5,000த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. பேரூராட்சிக்குட்பட்ட
சில பகுதிகளுக்கு ஒருவாரமாக சரிவர குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. தண்ணீர்
கிடைக்காததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். குடிநீருக்காக, நீண்ட
தூரம் செல்ல வேண்டியுள்ளது. அதிகாரிகளிடம் இப்பிரச்னை
தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
உடனடியாக, இங்குள்ள மக்களுக்கு குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும்' என்றனர். சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி சப்-கலெக்டர் அருண்
சுந்தர் தயாளன், 'சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி அனைத்து பகுதிகளுக்கும்
சீரான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை பொதுமக்கள்
அமைதியாக இருக்க வேண்டும்' என தெரிவித்தார். இதையடுத்து, மக்கள் கலைந்து
சென்றனர். தேர்தல் நேரத்தில், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால்,
அப்பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த வேட்பாளர்கள் ஒன்று கூடியதால்,
பரபரப்பு ஏற்பட்டது.


