ரூ.7 லட்சம் மோசடி:திருப்பூர் மேயரின் மைத்துனர் கைது
ரூ.7 லட்சம் மோசடி:திருப்பூர் மேயரின் மைத்துனர் கைது
ரூ.7 லட்சம் மோசடி:திருப்பூர் மேயரின் மைத்துனர் கைது
திருப்பூர்:திருப்பூரில், பனியன் நிறுவன உரிமையாளரிடம், ஏழு லட்ச ரூபாயை மிரட்டிப் பறித்து மோசடி செய்ததாக, மேயரின் மைத்துனரை போலீசார் நேற்று கைது செய்தனர்.பல்லடம், சின்னவடுகபாளையத்தைச் சேர்ந்தவர் கதிரேசன்; இவரின் மகன் கோகுல சரவணன்.
கோகுல சரவணன் கொடுத்த இரு காசோலைகளை, வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லாமல் திரும்பின. இதனால், இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.
கடந்த 2010, அக்., 29ம் தேதி, இரு நபர்களை அனுப்பி, அவர்கள் மூலம் கோகுல சரவணனை பலவந்தமாக மாநகர தி.மு.க., அலுவலகத்துக்கு அழைத்து வரச் செய்த கணேசன், மாரிமுத்துவுக்குத் தர வேண்டிய பணத்தை உடனடியாகத் தருமாறு கேட்டு மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், மாரிமுத்து திருப்பூர் கோர்ட்டில் கோகுலசரவணன் மீது, காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். மாரிமுத்துவுக்குத் தர வேண்டிய ஏழு லட்ச ரூபாயை கொடுத்தும், அப்பணத்தை மாரிமுத்துவுக்குத் தராமல் மோசடி செய்த கணேசன் மீது, திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவில் கோகுல சரவணன் புகார் செய்தார்.
நேற்று காலை 11.40 மணிக்கு, திருப்பூர் மாநகர தி.மு.க., அலுவலகத்தில் இருந்த கணேசனை, டி.எஸ்.பி., மற்றும் போலீசார் கைது செய்தனர். மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணை நடத்திய பிறகு, திருப்பூர் ஜே.எம்., கோர்ட் எண் 1ல் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


