ADDED : செப் 08, 2011 10:30 PM
பொங்கலூர் : பொங்கலூர், கண்டியன்கோவில் அரசு நடுநிலைப்பள்ளியில் மனு நீதி
நாள் முகாம் நடந்தது.
ஆர்.டி.ஓ., செங்கோட்டையன் தலைமை வகித்தார். துணை
தாசில்தார் ராஜகோபால் வரவேற்றார். ஊராட்சி தலைவி சரஸ்வதி, முன்னாள் ஊராட்சி
தலைவர் கோபால் முன்னிலை வகித்தனர்.இலவச மின்சாரம், ரேஷன் கார்டு, பட்டா
மாறுதல், முதியோர் மற்றும் ஊனமுற்றோர் உதவித்தொகை கேட்டு பொதுமக்கள்
மனுக்கள் அளித்தனர். தாயம்பாளையம் பெரியார் காலனி மக்கள் சுடுகாடு கேட்டு
மனு கொடுத்தனர். 11 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவு, 10 பேருக்கு முதியோர்
உதவித்தொகை வழங்க உத்தரவு வழங்கப்பட்டது. ஆர்.ஐ., மகேஷ்வரன், வேளாண் துறை
உதவி அலுவலர் அர்ஜூனன், வி.ஏ.ஓ., முருகேசன், ஊராட்சி உறுப்பினர் மகாலிங்கம்
உட்பட பலர் பங்கேற்றனர்.


