ADDED : செப் 09, 2011 10:42 PM
சாத்தூர் : சாத்தூரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை யடிக்கப்பட்டது.
சாத்தூர் படந்தால் வசந்தம் நகரில் வசித்து வருபவர் பேச்சியப்பன், இவர் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் கிளர்க்காக பணிபுரிகிறார். இவர், கடந்த ஏழாம் தேதி வீட்டை பூட்டி விட்டு, தனது மனைவி சாந்தியுடன் கோபிச் செட்டி பாளையத்தில் நடந்த திருமணத்திற்கு சென்று விட்டு, கோயம்புத்தூர் சென்றார். இந்நிலையில், நேற்று காலை இவரது வீடு கதவு திறந்து கிடந்தது.அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் பார்த்த போது வீட்டின் கதவு, பூட்டை உடைத்து,உள் புகுந்த நபர்கள், பீரோக்களை உடைத்து பொருட்களை திருடி உள்ளனர். மோப்பநாய் ராணி வரவழைத்தும் விசாரித்தனர். பேச்சியப்பனுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். கொள்ளை போன நகை மற்றும் பணம் எவ்வளவு என்பது தெரியாத நிலையில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போயிருக்கலாம், என, போலீசார் தெரிவித்தனர். சாத்தூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


