/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/இலவச அரிசியை விற்றவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைஇலவச அரிசியை விற்றவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இலவச அரிசியை விற்றவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இலவச அரிசியை விற்றவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இலவச அரிசியை விற்றவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : ஜூலை 13, 2011 10:13 PM
திருப்புத்தூர் : திருப்புத்தூர் தாலுகா ஒப்பிலான்பட்டி ரேஷன் கடையில் இலவச அரிசியை மூடை ரூ.
200க்கு, விற்ற விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க கிராமத்தினர் கோரியுள்ளனர். ஒப்பிலான்பட்டி கிராமத்தினர் அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: கடந்த ஜனவரியில் ஒப்பிலான்பட்டி ரேஷன் கடை விற்பனையாளர் இலவச அரிசியை ரூ.200க்கு விற்கும் போது கிராமத்தினர் பிடித்தனர்.நடவடிக்கை எடுக்க வழங்கல் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் வங்கி செயலரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விற்பனையாளர் பல முறை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவர். தற்போது மீண்டும் பகிரங்கமாக அரிசியை விற்றுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


