கவுன்சிலர் மீது ஆக்கிரமிப்பு புகார்
கவுன்சிலர் மீது ஆக்கிரமிப்பு புகார்
கவுன்சிலர் மீது ஆக்கிரமிப்பு புகார்
ADDED : செப் 07, 2011 12:54 AM
ஊட்டி : 'கவுன்சிலரால் ஆக்கிரமிக்கப்பட்ட தனது இடத்தை மீட்டு தர வேண்டும்,'
என கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.
ஊட்டி தலைகுந்தா பகுதியில்
வசிக்கும் பத்மாவதி கலெக்டருக்கு கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது: ஊட்டி
குந்தா ஹவுஸ் பகுதியில் 15 சென்ட் நிலம் எனக்கு சொந்தமாக உள்ளது. இந்த
இடத்தில் அப்பகுதி கவுன்சிலர் கார்த்திகேயன், எனது இடத்தையும் அதை
ஒட்டியுள்ள ரோட்டோர இடத்தையும் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளார். இதை
ஆட்சேபித்து கடந்த மாதம் 24ம் தேதி மற்றும் 31ம் தேதிகளில் தாசில்தாரிடம்
மனு கொடுத்தேன். மேலும் போலீசிலும் புகார் அளித்தேன். ஆனால் எவ்வித
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில்
கட்டுமானத்தை தடுக்க தடையாணை பெற்றேன். ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவையும்
மீறி கட்டுமான பணிகளை கவுன்சிலர் செய்து வருகிறார். மேலும் எனது
நிலத்துக்கு செல்லும் நடைபாதையும் அடைத்துள்ளார். எனவே, ஆக்கிரமிக்கப்பட்ட
இடத்தை மீட்டு, எனது இடத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும். இவ்வாறு பத்மாவதி கூறியுள்ளார்.


