/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஆக்கிரமிப்பு, அசுத்தம்: வாகன ஓட்டிகள் அவதிஆக்கிரமிப்பு, அசுத்தம்: வாகன ஓட்டிகள் அவதி
ஆக்கிரமிப்பு, அசுத்தம்: வாகன ஓட்டிகள் அவதி
ஆக்கிரமிப்பு, அசுத்தம்: வாகன ஓட்டிகள் அவதி
ஆக்கிரமிப்பு, அசுத்தம்: வாகன ஓட்டிகள் அவதி
ADDED : செப் 08, 2011 10:21 PM
சின்னாளபட்டி : சின்னாளபட்டி அன்னை சத்யா நகரில் ஆக்கிரமிப்பு, அசுத்தங்களை அகற்ற வேண்டும்.
திண்டுக்கல்- மதுரை சாலையில் இருந்து சின்னாளபட்டிக்குள் செல்லும் மெயின் ரோட்டின் ஓரங்களை ஆக்கிரமித்து ஏராளமானவர்கள் குடிசை அமைத்திருந்தனர். கடந்த ஆட்சியில் இந்த குடிசைகளை முறைப்படுத்தாமல், அனைவருக்கும் பட்டா வழங்கப்பட்டது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், முழுவதும் மெயின்ரோட்டில் விடப்படுகிறது. இதனால் இப்பகுதி ரோடு ஓரங்களில் கழிவுநீர் சேறும், சகதியுமாக தேங்கி கிடக்கிறது. ஆக்கிரமிப்புகளும் அதிகரித்துள்ளதால் ரோட்டின் அளவு குறுகலாகியுள்ளது. கனரக வாகனங்கள் வரும்போது, இருசக்கர வாகன ஓட்டிகள், சைக்கிளில் செல்வோர் ரோட்டை விட்டு கீழிறங்க முடியாத அளவிற்கு கழிவுநீர் தேங்கியுள்ளது.கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் உயிரை கையில் பிடித்தவாறு பயணிக்க வேண்டியுள்ளது. பிரதான ரோட்டில் மக்களை அல்லாட வைக்கும் ஆக்கிரமிப்பு, அசுத்தங்களை அகற்ற பேரூராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


