ADDED : செப் 08, 2011 01:06 AM
திருநெல்வேலி : மூலைக்கரைப்பட்டி அருகே பெண் தீயில் கருகி இறந்தார்.
மூலைக்கரைப்பட்டி அருகே முனைஞ்சிப்பட்டி சந்தை தெருவை சேர்ந்த பிரமுத்து மனைவி சுப்புலட்சுமி(38). கடந்த 30ம்தேதி இவர் வீட்டில் சமையல் செய்த போது உடையில் தீப்பிடித்தது. உடல் கருகிய நிலையில் பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சுப்புலட்சுமி சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


