/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நகரில் போக்குவரத்தை நெறிப்படுத்த "கிரீன் காரிடர் சிஸ்டம்' விரைவில் அமல்நகரில் போக்குவரத்தை நெறிப்படுத்த "கிரீன் காரிடர் சிஸ்டம்' விரைவில் அமல்
நகரில் போக்குவரத்தை நெறிப்படுத்த "கிரீன் காரிடர் சிஸ்டம்' விரைவில் அமல்
நகரில் போக்குவரத்தை நெறிப்படுத்த "கிரீன் காரிடர் சிஸ்டம்' விரைவில் அமல்
நகரில் போக்குவரத்தை நெறிப்படுத்த "கிரீன் காரிடர் சிஸ்டம்' விரைவில் அமல்
ADDED : செப் 08, 2011 01:52 AM
கோவை : ''கோவை-அவிநாசி சாலையில் வாகன போக்குவரத்தை நெறிப்படுத்துவதற்கான 'கிரீன் காரிடர் சிஸ்டம்' கூடிய விரைவில் செயல்பாட்டுக்கு வரும்,'' என்று, மாநகர போலீஸ் குற்றம் மற்றும் போக்குவரத்து துணைக் கமிஷனர் செந்தில்குமார் தெரிவித்தார்.
கோவை மாநகரச் சாலைகளில் பல ஆயிரம் வாகனங்கள் இயங்குகின்றன; தினமும், ஏறத்தாழ 3.5 லட்சம் மக்கள் சாலையை பயன்படுத்துகின்றனர். முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கடந்த ஆண்டு வரை 36 சிக்னல்கள் அமைக்கப்பட்டிருந்தன. நடப்பு ஆண்டில், சின்னியம்பாளையம், கோவை மெடிக்கல் சென்டர், அரசு மருத்துவக் கல்லூரி, அரசு தொழில்நுட்பக் கல்லூரி, சத்தி ரோடு அத்திபாளையம் பிரிவு, சுந்தராபுரம், சரவணம்பட்டி, மேட்டுப்பாளையம் ரோடு ஹவுசிங் யூனிட் சந்திப்பு பகுதிகளில் புதிதாக 8 சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், சிக்னல்களின் இயக்கத்தில் சில குறைபாடுகள் இருப்பதாலும், ஒரு சாலை சந்திப்பில் 'கிரீன் சிக்னல்' கிடைத்து வாகனங்கள் கிளம்பிச் செல்லும்போது அடுத்த சிக்னலில் 'ரெட் சிக்னல்' காட்டுவதாலும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றுவிடுகின்றன. இதை தவிர்த்து, சீரான போக்குவரத்துக்கு வழிவகை செய்ய கோவை - அவிநாசி சாலையில் 'கிரீன் காரிடர் சிஸ்டத்தை' சோதனை அடிப்படையில் அமல்படுத்த, போலீஸ் கமிஷனர் அலுவலகம் முடிவு செய்துள்ளது; அதற்கான பணிகள் துரிதமாக நடக்கின்றன. 'கிரீன் காரிடர்' என்பது, ஒரு போக்குவரத்து சிக்னலில் வாகனங்கள் செல்ல பச்சை நிற விளக்கு எரியும்போது, அதன் தொடர்ச்சியாக உள்ள சிக்னல்களிலும் அதே போன்று வாகனங்கள் நிற்காமல் செல்லும் வகையில் பச்சை நிற விளக்கு எரியும் விதத்தில் அமைப்பது ஆகும். இதுகுறித்து, மாநகர போலீஸ் குற்றம் மற்றும் போக்குவரத்து துணைக்கமிஷனர் செந்தில்குமார் கூறுகையில், ''கோவை - அவிநாசி சாலையில் 'கிரீன் காரிடர் சிஸ்டம்' கூடிய விரைவில் சோதனை அடிப்படையில் அமலுக்கு வரும்; பணிகள் துரிதமாக நடக்கின்றன. இந்த முறையில் போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும்போது, வாகன ஓட்டிகள் ஒவ்வொரு சிக்னலிலும் நின்று செல்ல வேண்டிய சிரமம் இருக்காது,'' என்றார்.


