/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சிறுபான்மையின பிளஸ் 1மாணவிகளுக்கு உதவி தொகைசிறுபான்மையின பிளஸ் 1மாணவிகளுக்கு உதவி தொகை
சிறுபான்மையின பிளஸ் 1மாணவிகளுக்கு உதவி தொகை
சிறுபான்மையின பிளஸ் 1மாணவிகளுக்கு உதவி தொகை
சிறுபான்மையின பிளஸ் 1மாணவிகளுக்கு உதவி தொகை
திருநெல்வேலி:தமிழகத்தில் 11ம் வகுப்பு படிக்கும் 767 சிறுபான்மையின மாணவிகளுக்கு மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.கல்வியில் சிறந்து விளங்கி வசதியின்றி கல்வியை தொடர இயலாத சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணவிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்திட்டம் தமிழகத்தில் வசிக்கும் முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மதத்தினர் வகுப்பை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு மத்திய அரசின் மவுலானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் 12 ஆயிரம் ரூபாய் கல்வி உதவி தொகை இரு தவணைகளில் வழங்கப்படுகிறது.
கல்வி உதவி தொகையில் கல்வி கட்டணம், பாட புத்தகம், எழுதுபொருட்கள் மற்றும் உண்டு, உறைவிட கட்டணமும் அடங்கும்.
கல்வி உதவி தொகை பெறுவதற்கு சிறுபான்மையின மாணவிகள் 10ம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மார்க் பெற்று நடப்பாண்டில் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 11ம் வகுப்பு பயில்பவராக இருக்க வேண்டும். சேர்க்கை அனுமதி சீட்டு, கடித நகல் இணைக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் அனைத்து வழிகளிலும் 1 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். வருமான சான்றிதழ், ஓய்வூதிய ஆணை, 20 ரூபாய் மதிப்புள்ள நீதிமன்ற சாரா முத்திரை தாளில் ஆவண நகல் இணைக்க வேண்டும்.
மாணவிகள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை வைத்து தாங்கள் பயிலும் கல்வி நிலையத்தில் வரும் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இக்கல்வி உதவி தொகைக்கான விண்ணப்பங்கள் உறுதி ஆவணம் (அபிடவிட்), இதர விபரங்கள் தீதீதீ.லரம்.ஙடய.டங என்ற வெப்சைட்டில் டவுன்லோடு செய்யலாம்.
கல்வி நிலைய தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளர் தங்கள் கல்வி நிலையத்தின் 11ம் வகுப்பு படிக்கும் சிறுபான்மையின மாணவிகளிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று சரி பார்த்து அத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் உரிய சான்றுரைகளுடன் கையொப்பம் செய்து விண்ணப்ப படிவத்துடன் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் செல்வராஜ் தெரிவித்தார்.


