வழக்கறிஞர் மகன் கொலை வழக்குவிரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு
வழக்கறிஞர் மகன் கொலை வழக்குவிரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு
வழக்கறிஞர் மகன் கொலை வழக்குவிரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : செப் 06, 2011 02:21 AM

சென்னை:ஐகோர்ட் வழக்கறிஞரின் மகன் கொலை வழக்கில், புலன்விசாரணையை துரிதப்படுத்த, சி.பி.ஐ.,க்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.சென்னை ஐகோர்ட்டில், வழக்கறிஞராக பிராக்டீஸ் செய்பவர் சங்கரசுப்பு.
இவரது மகன் சதீஷ்குமார், கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரிக்க, நீதிபதிகள் நாகப்பன், சிவகுமார் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டது.விசாரணை தொடர்பான அறிக்கையை, ஐகோர்ட்டில் சி.பி.ஐ., அவ்வப்போது தாக்கல் செய்கிறது.இவ்வழக்கு நேற்று, நீதிபதிகள் நாகப்பன், சிவகுமார் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. சங்கரசுப்பு சார்பில் வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜரானார். 'புலன்விசாரணையை சி.பி.ஐ., துரிதப்படுத்த வேண்டும்; சந்தேகப்படும் நபர்களை காவலில் எடுத்து விசாரிப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் சி.பி.ஐ., எடுக்க வேண்டும்' என, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில் கூறியதோடு, விசாரணையை அக்., 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.


