/உள்ளூர் செய்திகள்/தேனி/வாக்காளர் பட்டியலில் போட்டோ மாறியிருந்தாலும் ஓட்டளிக்கலாம்வாக்காளர் பட்டியலில் போட்டோ மாறியிருந்தாலும் ஓட்டளிக்கலாம்
வாக்காளர் பட்டியலில் போட்டோ மாறியிருந்தாலும் ஓட்டளிக்கலாம்
வாக்காளர் பட்டியலில் போட்டோ மாறியிருந்தாலும் ஓட்டளிக்கலாம்
வாக்காளர் பட்டியலில் போட்டோ மாறியிருந்தாலும் ஓட்டளிக்கலாம்
ADDED : அக் 07, 2011 10:45 PM
தேனி : வாக்காளர் பட்டியலில் முகவரி சரியாக இருந்து போட்டோ மாறியிருந்தாலும் ஓட்டளிக்கலாம் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.உள்ளாட்சி தேர்தலுக்கு வெளியிடப்பட்டுள்ள போட்டோ வாக்காளர் பட்டியலில் ஆண் முகவரியில் பெண் படமும், பெண் முகவரியில் ஆண் படமும் உள்ளது.
இதனால் போட்டோ மாறியுள்ள வாக்காளர்கள் மத்தியில் நாம் ஓட்டளிக்க முடியுமா என்ற குழப்பம் உருவாகி உள்ளது.தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'முகவரி சரியாக இருந்து போட்டோ மாறியிருந்தாலும், அரசு வழங்கிய பூத் சிலிப், அல்லது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 18 அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி ஓட்டளிக்க முடியும்' என்றனர்.


