/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/உள்நாட்டு உற்பத்தியையும் கவனியுங்கள் :மத்திய அரசுக்கு "டீமா' வேண்டுகோள்உள்நாட்டு உற்பத்தியையும் கவனியுங்கள் :மத்திய அரசுக்கு "டீமா' வேண்டுகோள்
உள்நாட்டு உற்பத்தியையும் கவனியுங்கள் :மத்திய அரசுக்கு "டீமா' வேண்டுகோள்
உள்நாட்டு உற்பத்தியையும் கவனியுங்கள் :மத்திய அரசுக்கு "டீமா' வேண்டுகோள்
உள்நாட்டு உற்பத்தியையும் கவனியுங்கள் :மத்திய அரசுக்கு "டீமா' வேண்டுகோள்
ADDED : செப் 08, 2011 02:21 AM
திருப்பூர் : 'வெளிநாட்டு ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு முடிவெடுப்பதற்கு முன், உள்நாட்டு உற்பத்தியாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்,' என, 'டீமா' சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் அறிக்கை: இந்தியா - வங்கதேசத்துக்கு இடையேயான வர்த்தக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, 61 பொருட்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 48 வகையான ஆயத்த ஆடைகளுக்கு இறக்குமதிக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 480 பொருட்களுக்கு ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் இருந்து தடை விதிக்கப்பட்டிருந்தது. அவற்றில், 61 பொருட்களை இறக்குமதி தீர்வையின்றி, ந்தியாவில் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் 48 வகையான பொருட்கள் பல்வேறு ஆயத்த ஆடைகள் பிரிவுகளில் வருவதால், இந்திய ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் பேரதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் ஆயத்த ஆடைகளின் சில்லறை வணிகம், 25 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. வங்கதேசத்துக்கு இச்சலுகை அளிப்பதன் மூலமாக, இந்திய ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள்.தென்கொரியா, சீனா, தாய்லாந்து, வியட்நாமில் இருந்து ஆடைகளை குறைந்த விலையில் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது. இதன் மூலமாக, மறைமுகமாக பல்வேறு நாடுகளின் போட்டியை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்படும். வங்கதேச உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை, இந்திய உற்பத்தியாளர்களை விட இரு மடங்கு அதிகமாக உள்ளது. உற்பத்தி செலவு குறைவாக இருப்பதாலும், சாயமிடுதல் போன்றவற்றை குறைவான செலவில் செய்யும் வாய்ப்பு உள்ளதாலும், இந்திய ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் போட்டியை சமாளிக்க முடியாத நிலை ஏற்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக, நூல் விலை உயர்வு, சாய சுத்திகரிப்பு ஆலைகள் பிரச்னை, சில்லறை வணிகத்துக்கு கலால் வரி போன்ற பல்வேறு இன்னல்கள் உருவாகியுள்ளன. வரிச்சலுகையுடன் கூடிய வர்த்தக ஒப்பந்தம் காரணமாக, உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மேலும் பல நெருக்கடிக்கு உள்ளாவார்கள். எனவே, மத்திய அரசு இதுபோன்ற ஒப்பந்தங்கள் தொடர்பாக முடிவெடுப்பதற்கு முன், உள்நாட்டு உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.


