/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கடையம் - நெல்லை கூடுதல் பஸ் இயக்க கோரிக்கைகடையம் - நெல்லை கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
கடையம் - நெல்லை கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
கடையம் - நெல்லை கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
கடையம் - நெல்லை கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
ADDED : ஜூலை 14, 2011 01:09 AM
ஆழ்வார்குறிச்சி : கடையம் - நெல்லை கூடுதல் பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடையத்திலிருந்து நெல்லைக்கு முதலியார்பட்டி, திருமலையப்பபுரம், பொட்டல்புதூர், வெள்ளிகுளம், பாப்பான்குளம், துப்பாக்குடி, இடைகால், முக்கூடல் வழியாக பஸ்கள் செல்கின்றன. இதில் அரசு அலுவலகங்களுக்கு செல்பவர்கள், மாணவ, மாணவிகள் அதிகளவில் செல்கின்றனர். இந்த பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வராததால் கடையம் பஸ் ஸ்டாண்டில் எப்போதும் அதிகளவு கூட்டம் காணப்படுகிறது.கடையம் மற்றும் சுற்றுவட்டார மக்கள் பஸ் ஸ்டாண்டில் அதிக நேரம் காத்திருப்பதால் பஸ்களில் ஏறுவதற்காக மிகவும் போராட வேண்டிய நிலையுள்ளது. இதில் மாணவ, மாணவிகள் பஸ்களில் ஏற முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். ஏற்கனவே செங்கோட்டை - நெல்லை பாதையில் ரயில் போக்குவரத்து அகல ரயில்பாதை பணி காரணமாக நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் அதிகளவில் கூட்டம் ஏற்படுகிறது.இந்நிலையை போக்க கடையத்திலிருந்து முக்கூடல் வழியாக நெல்லைக்கு கூடுதல் பஸ் விட வேண்டும். மேலும் குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்களை இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


