/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கோரம்பள்ளத்தில் அடிபம்புகளை சீரமைக்க கோரிக்கைகோரம்பள்ளத்தில் அடிபம்புகளை சீரமைக்க கோரிக்கை
கோரம்பள்ளத்தில் அடிபம்புகளை சீரமைக்க கோரிக்கை
கோரம்பள்ளத்தில் அடிபம்புகளை சீரமைக்க கோரிக்கை
கோரம்பள்ளத்தில் அடிபம்புகளை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 27, 2011 02:22 AM
தூத்துக்குடி : கோரம்பள்ளம் பஞ்.,குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய அடிபம்புகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் பஞ்.,நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.தூத்துக்குடி யூனியனில் உள்ளது கோரம்பள்ளம் பஞ்சாயத்து.
இங்கு கோரம்பள்ளம், பெரியநாயகிபுரம், காலான்கரை உட்பட பல்வேறு இடங்களில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இங்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அடிபம்புகள் அமைக்கப்பட்டு அவற்றின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது அடிபம்புகள் பழுதாகிவிட்டதால் குடிநீர் வசதி இல்லாமல் பொதுமக்கள் அல்லல்படுகின்றனர். தெருப்பைப்புகளில் குறிப்பிட்ட நேரத்தில்தான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. குடிநீர் சரியாக கிடைக்காததால் பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீர் ரூ.2 என விலை கொடுத்து வாங்கி குடிக்க வேண்டிய அவல நிலையுள்ளது. இந்நிலையை மாற்ற கோரம்பள்ளம் பஞ்.,பகுதியில் அடிபம்புகளை உடனடியாக பழுதுபார்க்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.