/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பஸ் ஸ்டாப் அருகே டாஸ்மாக் பள்ளி மாணவர்கள் அச்சம்பஸ் ஸ்டாப் அருகே டாஸ்மாக் பள்ளி மாணவர்கள் அச்சம்
பஸ் ஸ்டாப் அருகே டாஸ்மாக் பள்ளி மாணவர்கள் அச்சம்
பஸ் ஸ்டாப் அருகே டாஸ்மாக் பள்ளி மாணவர்கள் அச்சம்
பஸ் ஸ்டாப் அருகே டாஸ்மாக் பள்ளி மாணவர்கள் அச்சம்
ADDED : ஜூலை 25, 2011 09:37 PM
கோவை : வெங்கிட்டாபுரம் பஸ் ஸ்டாப் அருகில் செயல்படும் 'டாஸ்மாக்' கடை, பள்ளி மாணவர்களை அச்சுறுத்தி வருகிறது.
சாயிபாபாகாலனி, என்.எஸ்.ஆர்., ரோடு வெங்கிட்டாபுரம் பஸ் ஸ்டாப் அருகில், டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இங்கு 'பார்' வசதியில்லை. மெயின்ரோடு, பஸ் ஸ்டாப், அருகிலுள்ள குடியிருப்பு, வணிக வளாகம் முன் மது அருந்துவது தொடர்கிறது. போதை ஆசாமிகளின் அட்டகாசம் தொடர்வதால், பள்ளி மாணவர்கள் பெரும் அச்சத்துக்கு உள்ளாகின்றனர். பொதுமக்கள் கூறுகையில், 'பாரதி மெட்ரிக்குலேஷன், அவிலா கான்வென்ட், சிந்தி வித்யாலயா ஆகிய மூன்று பள்ளிக்கும், முக்கிய பஸ் ஸ்டாப் வெங்கிட்டாபுரம். 'இரண்டு மருத்துவமனை, திருமண மண்டபம், வணிக வளாகம் போன்றவை டாஸ்மாக் அருகில் உள்ளது. ரோட்டில் மது அருந்துவது, பாட்டில் உடைத்தல், பஸ் ஸ்டாப்பில் உறங்குதல், தகாத வார்த்தை பேசியவாறு சண்டை போட்டுக் கொள்ளுதல் என, சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த இடத்தில் இருந்து டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்' என்றனர்.