ADDED : செப் 03, 2011 12:21 AM
சிவகாசி : ஸ்டேட் பாங்க் காலனியில் திருட்டு அதிகரிப்பதால், சிப்ட் முறையில் பொதுமக்கள் காவல் காக்கின்றனர்.சிவகாசி அருகே ஸ்டேட் பாங்க் காலனியில் அரசு ஊழியர் ,ஆசிரியர்கள் அதிகம் வசிக்கின்றனர்.
ஒரு மாதமாக, திருட்டு கும்பல் கைவரிசை காட்டுவதால், காலனி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இரவு 12 மணிக்கு மேல் வரும் கும்பல், டூவீலர்களில் பெட்ரோல் , காஸ் சிலிண்டர்களை திருடுகின்றன . சில நாட்களுக்கு முன், திருட்டில் ஈடுபட்ட இருவரை, வீட்டு உரிமையாளர் பிடிக்க முயற்சித்த போது , டூவீலரை போ ட்டு விட்டு ஓடினர். டூவீலரை போலீசில் ஒப்படைத்தும் நடவடிக்கை இல்லை. காலனி முன் உள்ள காலி இடத்தில் ,இரவு 7 மணிக்குமேல் சிலர் மது குடிக்கும் இடமாக பயன்படுத்துகின்றனர். இரவில் பெண்கள் வந்து செல்ல முடியவில்லை. பள்ளி மாணவிகளை கேலி கிண்டல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருத்தங்கல் போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.போலீசை நம்பி பயன் இல்லை என முடிவு செய்த காலனி மக்கள் , தினம் ஐந்து பேர் சேர்ந்து, சுழற்சி முறையில் இரவு ரோந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். திருத்தங்கல் போலீசார் இப் பகுதியில் கவனம் செலுத்தி, திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


