ADDED : செப் 07, 2011 12:30 AM
திருப்பூர் : அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு, கோமாதா பூஜை, ஆசிரியர் தின விழா நடந்தது.
தாளாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் மஞ்சுளா வரவேற்றார். கோவை காமாட்சிபுரி ஆதினம் அங்காளபரமேஸ்வரி சித்தர் பீடத்தை சேர்ந்த சிவலிங்ககேஸ்வர சுவாமி பங்கேற்று, விநாயகர் வேள்வி, 27 நட்சத்திர மகா யாகம், கோமாதா பூஜை, நவசக்தி வேள்வி செய்யப்பட்டது. நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் முருகன் சிறப்புரை வழங்கினார். பெற்றோர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


