/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பிரம்மதேசம் கிராம மக்களுக்கு இலவசமாக வழங்க ஆடுகள் தயார்பிரம்மதேசம் கிராம மக்களுக்கு இலவசமாக வழங்க ஆடுகள் தயார்
பிரம்மதேசம் கிராம மக்களுக்கு இலவசமாக வழங்க ஆடுகள் தயார்
பிரம்மதேசம் கிராம மக்களுக்கு இலவசமாக வழங்க ஆடுகள் தயார்
பிரம்மதேசம் கிராம மக்களுக்கு இலவசமாக வழங்க ஆடுகள் தயார்
ADDED : செப் 16, 2011 12:51 AM
விழுப்புரம்:தமிழக அரசின் ஆடுகள் வழங்கும் திட்டத்தில் விழுப்புரம் அருகே
உள்ள பிரம்மதேசத்தில் 30 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்க தயாராக உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் சண்முகம் இலவச திட்டங்களை இன்று துவக்கி
வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் விழுப்புரம் அடுத்த பிரம்மதேசம்
கிராமத்தில் ஆடுகள் வழங்க தயார்படுத்தப்பட்டுள்ளது.முன்னதாக
பிரம்மதேசத்தில் கிராம சபையினைக் கூட்டி பயனாளிகள் தேர்வு
செய்யப்பட்டுள்ளனர். பி.டி.ஒ., கால்நடை மருத்துவர், வி. ஏ.ஓ., முன்னிலையில்
குழு ஒன்றை அமைத்து, 30 பயனாளிகளை தேர்வு செய்தனர்.
ஒரு பயனாளிக்கு 4
ஆடுகள் வீதம் 30 பேருக்கு 120 ஆடுகள் வாங்கப்பட்டுள்ளது.செஞ்சி சந்தை
மற்றும் கிராம பகுதிகளுக்குச் சென்று இந்த ஆடுகளை வாங்கியுள்ளனர்.
பயனாளிகளே நேரில் சென்று தலா 2000 முதல் 2500 வரை ஆடுகளை விலைக்கு
வாங்கியுள்ளனர்.இந்த ஆடுகளின் உடல் நிலையை கால்நடை மருத்துவர் சோதனை
செய்துள்ளார். ஆடுகளுக்கு தலா 300 ரூபாயில் ஓராண்டிற்கு அரசின் காப்பீடு
வழங்கப்பட்டுள்ளது. 4 ஆடுகள் வாங்க 10 ஆயிரம் ரூபாயும், கூடுதல்
செலவினங்களுக்கு 2000மும், போக்குவரத்து செலவினங்களுக்கு 150ம் சேர்த்து
பயனாளிகளிடம் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.இந்த வகையில்
வாங்கப்பட்டுள்ள ஆடுகளின் காதுகளில் தமிழக அரசின் டேக் அடிக்கப்பட்டு
பயனாளிகளிடம் வழங்க தயாராக வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் தாசில்தார்
ஜவகர், கால்நடை மருத்துவர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள்
பயனாளிகளுக்கு வழங்க உள்ள ஆடுகளை நேற்று நேரில் பார்வையிட்டனர்.


