/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சிதைந்த நகராட்சியை சீரமைப்பேன் : அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சுசிதைந்த நகராட்சியை சீரமைப்பேன் : அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சு
சிதைந்த நகராட்சியை சீரமைப்பேன் : அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சு
சிதைந்த நகராட்சியை சீரமைப்பேன் : அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சு
சிதைந்த நகராட்சியை சீரமைப்பேன் : அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சு
ADDED : அக் 08, 2011 10:50 PM
திண்டுக்கல் : ''தி.மு.க.,வால் சிதைந்த நகராட்சியை சீரமைத்து, உள்ளாட்சியில் நல்லாட்சி தருவேன்,'' என திண்டுக்கல் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் வி.மருதராஜ் கூறினார்.
திண்டுக்கல் பேகம்பூர், பழநிரோட்டில் அவர் பேசியதாவது: தமிழகத்தை முதல் மாநிலமாக்க முதல்வர் ஜெ., பாடுபட்டு வருகிறார். அவர் வழியில் அமைச்சர் விஸ்வநாதனும் பணியாற்றி வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக திண்டுக்கல் நகராட்சி தி.மு.க., ஆட்சியால் சீரழிந்து, சிதைக்கப்பட்டுள்ளது. இதை சீரமைக்க எனக்கு வாய்ப்பளியுங்கள். பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு, நகராட்சி அலுவலகத்தில் மக்கள் அளிக்கும் மனுக்கள் வாங்க காலை 10 முதல் மாலை 5 மணிவரை தனி அதிகாரி ஏற்பாடு செய்வேன். இந்த மனுக்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, உடனே சான்றிதழ் வழங்கப்படும். நகரில் உள்ள முக்கியஸ்தர்களை தேர்வு செய்து, நகர் நல கமிட்டி அமைப்பேன். அவர்களின் கருத்துக்கள் அறிந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஆத்தூர் அணையில் பிரதான குழாய்கள் பதித்து 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆத்தூரில் இருந்து திண்டுக்கல் நகர் வரை புதியதாக பிரதான குழாய் அமைக்கப்படும். அணையை துர்வாரி, கொள்ளளவு அதிகரிக்கவும், நகருக்கு அதிகளவு குடிநீர் கொண்டுவந்து, பிரச்னையை தீர்க்கப்படும். நகரின் நான்கு பகுதிகளில் நகராட்சி வரி வசூல் மையம் அமைக்கப்படும். காவிரி நீரை சுத்திகரித்து வழங்க, எம்.வி.எம்.,நகரில் புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் பாதாளசாக்கடை பணிகளில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு, மறுசீரமைப்புபணி, புதிய ரோடுகள் போடும் பணி, குழாய்பதிக்கும் பணியும் நடக்கும். நிதி நெருக்கடியால் தடுமாறும் நகராட்சி வருமானத்தை பெருக்க, உரிய இடத்தில் வணிக வளாகம் அமைத்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் திட்டப்பணிகள் நிறைவேற்றப்படும். நகராட்சி பள்ளிகள் சீரமைக்கப்பட்டு, தரம் உயர்த்தப்படும். பொழுதுபோக்கு பூங்கா அமைத்து, பஸ்ஸ்டாண்ட் சீரமைத்து, போக்குவரத்து நெரிசல் தவிர்க்கவும், பழநிரோட்டில் நவீன வசதிகளுடன் காய்கறி மார்க்கெட் அமைத்து, அரசின் இலவச திட்டங்கள் அனைத்தும் வீடுதேடி வரவும் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.


