/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நெல்லியாளம் நகராட்சி தேர்தலில்குறைவு 2: அதிகம் 10 பேர்நெல்லியாளம் நகராட்சி தேர்தலில்குறைவு 2: அதிகம் 10 பேர்
நெல்லியாளம் நகராட்சி தேர்தலில்குறைவு 2: அதிகம் 10 பேர்
நெல்லியாளம் நகராட்சி தேர்தலில்குறைவு 2: அதிகம் 10 பேர்
நெல்லியாளம் நகராட்சி தேர்தலில்குறைவு 2: அதிகம் 10 பேர்
ADDED : அக் 08, 2011 11:08 PM
பந்தலூர் : நெல்லியாளம் நகராட்சியில் 3ம் வார்டில் 2 பேரும், 10ம் வார்டில் 10 பேரும் போட்டியிடுகின்றனர்.
நெல்லியாளம் நகராட்சியில் 3ம் வார்டுக்குட்பட்ட பகுதியில் 1,675 வாக்காளர்கள் உள்ளனர். பழங்குடியினருக்கான இந்த பகுதியில் ஏற்கனவே கவுன்சிலராக பதவி வகித்த ராதா காங்., சார்பிலும், புதிய முகமாக சீதா என்பவர் தி.மு.க. சார்பிலும் போட்டியிடுகின்றனர். நகராட்சியில் குறைந்த பட்சமாக 2 பேர் போட்டியிடும் வார்டாக 3ம் வார்டு மாறியுள்ளதால் வெற்றி வாய்ப்பு குறித்து கணிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.இதேபோல், 10ம் வார்டு பகுதியில் 1,298 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் ஏற்கனவே 9, 11ம் வார்டுகளில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று நகராட்சியில் துணை தலைவராகவும் பதவி வகித்த இப்ராகீம் உள்ளிட்ட 10 பேர் போட்டியிடுகின்றனர். தேவாலா பஜார்பகுதியாக உள்ள இந்த வார்டின் பதவிக்கு கடுமையான போட்டி நிலவுகிறது.


