/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/அரியலூர் நகராட்சி தலைவர் பதவிக்கு 9 பேர் மல்லுக்கட்டுஅரியலூர் நகராட்சி தலைவர் பதவிக்கு 9 பேர் மல்லுக்கட்டு
அரியலூர் நகராட்சி தலைவர் பதவிக்கு 9 பேர் மல்லுக்கட்டு
அரியலூர் நகராட்சி தலைவர் பதவிக்கு 9 பேர் மல்லுக்கட்டு
அரியலூர் நகராட்சி தலைவர் பதவிக்கு 9 பேர் மல்லுக்கட்டு
ADDED : அக் 05, 2011 01:31 AM
அரியலூர்: அரியலூர் நகராட்சி தலைவர் பதவிக்கு, தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., பா.ஜ.க., வேட்பாளர்கள் உள்பட 9 பேர் போட்டியிடுகின்றனர்.உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தவர்களில், வாபஸ் தேதிக்கு பிறகு வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளர் பட்டியல் படி, கணேசன் (அ.தி.மு.க.,), முருகேசன் (தி.மு.க.,), லெட்சுமி (தே.மு.தி.க.,), மனோகரன் (ம.தி.மு.க.,), உமா (காங்), பெரியசாமி (பா.ம.க.,), விஜயகுமார் (பா.ஜ.,), மற்றும் சுயேச்சை வேட்பாளர்களாக கோல்டா மேயர், தங்கையன் உள்பட 9 பேர் போட்டியிடுகின்றனர்.
அரியலூர் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 1வது வார்டில் மூன்று பேரும், 2 வது வார்டில் நான்கு பேரும், 3வது வார்டில் ஐந்து பேரும், 4வது வார்டில் நான்கு பேரும், 5 வது வார்டில் ஆறு பேரும், 6 வது வார்டில் மூன்று பேரும், 7 வது வார்டில் பதினோரு பேரும், 8வது வார்டில் ஏழு பேரும், 9 வது வார்டில் ஐந்து பேரும், 10வது வார்டில் ஆறு பேரும், 11 வது வார்டில் ஆறு பேரும், 12 வது வார்டில் எட்டு பேரும், 13 வது வார்டில் ஐந்து பேரும், 14 வது வார்டில் மூன்று பேரும், 15 வது வார்டில் ஆறு பேரும், 16 வது வார்டில் மூன்று பேரும், 17வது வார்டில் ஆறு பேரும், 18வது வார்டில் ஆறு பேரும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.


