/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஆயுத பூஜைக்காக குவிந்துள்ள அலங்கார காகித பூக்கள்ஆயுத பூஜைக்காக குவிந்துள்ள அலங்கார காகித பூக்கள்
ஆயுத பூஜைக்காக குவிந்துள்ள அலங்கார காகித பூக்கள்
ஆயுத பூஜைக்காக குவிந்துள்ள அலங்கார காகித பூக்கள்
ஆயுத பூஜைக்காக குவிந்துள்ள அலங்கார காகித பூக்கள்
ADDED : அக் 03, 2011 03:13 AM
ஈரோடு : ஈரோட்டில் ஆயுதபூஜை அன்று கடைகள் மற்றும் தொழிற்கூடங்களை அலங்கரிக்க, பிளாஸ்டிக், காகித பூக்கள் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளது.
இந்துக்கள் மட்டுமின்றி, அனைத்து மதத்தினரும், கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஆயுதபூஜை ஒன்றாகும்.
பள்ளி, கல்லூரி, வீடுகளில் சரஸ்வதி பூஜையும், கடைகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், வானகங்கள் என அனைத்தும், ஆயுதபூஜை நாளில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
ஆயுதபூஜை பண்டிகைக்கு பூஜை பொருட்கள், பழங்கள், பொரி வைத்து பூஜித்தாலும், தங்களது நிறுவனங்கள், கடைகளை அழகான கலர் பேப்பர்கள் மற்றும் பிளாஸ்டிக் பூக்களை கொண்டு அலங்கரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். நகரில் உள்ள பேப்பர் மார்ட், ஸ்டேஷனரி கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ், ஃபேன்சி ஸ்டோர்ஸ், மளிகை கடைகளில், இதுபோன்ற அலங்கார பொருட்கள் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளது.
சித்தோடு நெல்லை சுகி ஃபேன்சி உரிமையாளர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜை பண்டிகை நாளில் கடைகள், தொழிற்சாலைகளை அலங்கரிக்க, இதுபோன்ற பிளாஸ்டிக், பாலித்தின், பேப்பரால் தயாரிக்கப்பட்ட அலங்கார பூக்கள், நிலை மாலைகள், பூக்குண்டுகள், தெர்மாகோல்கள், கலர் ஜிகினா பூக்குண்டுகள், கட்டிங் பூ பேப்பர்கள் விற்பனை செய்யப்படுகிறது. மும்பை, பெங்களூரு, சிவகாசி ஆகிய இடங்களில் உற்பத்தி செய்து, சென்னை, கோவை ஆகிய இடங்களில் உள்ள வடமாநில மொத்த வியாபாரிகள் வாங்கி, சில்லறை விற்பனையில் எங்களுக்கு அனுப்புகின்றனர்.
நிலை மாலைகள் 100க்கும் மேற்பட்ட மாடல்களில் 35 முதல் 300 ரூபாய் வரையிலும், டிசைன் பூச்சரம் 6 முதல் 30 ரூபாய்க்கும், பூக்குண்டுகள் ஒன்று 30 முதல் 50 ரூபாய்க்கும், கலர் ஜிகினா டிசைன் பேப்பர் 15 முதல் 250 ரூபாய்க்கும், கட்டிங் பேப்பர் கட்டு 5 முதல் 15 ரூபாய்க்கும், டைமண்ட் சீட்டுகள் கட்டு 15 ரூபாய்க்கும், கலர் ரிப்பன் பேப்பர்கள் 5 முதல் 10 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கடந்தாண்டைவிட 20 சதவீதம் விலை அதிகரித்துள்ளது. டீஸல் விலையேற்றத்தால் வாடகை உயர்ந்தும், பேப்பர் விலை இரண்டு மடங்கு உயர்ந்ததால், விலை அதிகரித்தது. சுற்றுவட்டார பகுதிகளில் தறிக்கூடங்கள் அதிகமாக உள்ளதால், நாளை முதலே வியாபாரம் சூடுபிடிக்கும்.


