"பொட்டு' சுரேஷ், எஸ்ஸார் கோபி குருசாமி காவல் நீட்டிப்பு
"பொட்டு' சுரேஷ், எஸ்ஸார் கோபி குருசாமி காவல் நீட்டிப்பு
"பொட்டு' சுரேஷ், எஸ்ஸார் கோபி குருசாமி காவல் நீட்டிப்பு
ADDED : ஆக 17, 2011 01:34 AM

மதுரை: திருமங்கலம் சிவனாண்டி, பாப்பா கொடுத்த நில அபகரிப்பு வழக்கில், 'பொட்டு' சுரேஷ், அ.தி.மு.க., 54வது வார்டு பிரதிநிதி மயில்முருகன் கொடுத்த கொலை முயற்சி வழக்கில் வி.கே.குருசாமி ஆகியோர், பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கு, முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில், நேற்று விசாரணைக்கு வந்தது. 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், இருவருக்கும் காவல் நீட்டிப்பு செய்து மாஜிஸ்திரேட் உமாமகேஸ்வரி உத்தரவிட்டார். அவனியாபுரம் ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் கொலை வழக்கில், எஸ்ஸார் கோபி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கு, ஆறாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில், நேற்று விசாரணைக்கு வந்தது. இவருக்கும் காவல் நீட்டிப்பு செய்து, மாஜிஸ்திரேட் சுஜாதா உத்தரவிட்டார்.