/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொள்ளாச்சி-கோவை ரோடு பழுது : பொதுமக்கள் புகார்பொள்ளாச்சி-கோவை ரோடு பழுது : பொதுமக்கள் புகார்
பொள்ளாச்சி-கோவை ரோடு பழுது : பொதுமக்கள் புகார்
பொள்ளாச்சி-கோவை ரோடு பழுது : பொதுமக்கள் புகார்
பொள்ளாச்சி-கோவை ரோடு பழுது : பொதுமக்கள் புகார்
ADDED : ஆக 09, 2011 02:54 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி- கோவை ரோடு குண்டும் குழியுமாக காணப்படுகிறது என்று பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.பொள்ளாச்சி- கோவை ரோடு மிகவும் நெரிசல் மிகுந்த பகுதி.
கல்லூரி, வேலைகளுக்கு செல்ல பல நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் பொள்ளாச்சியிலிருந்து கோவை சென்று வருகின்றனர். ஆனால், ரோடு குண்டும் குழியுமாக காணப்படுவதால், மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி- கோவை ரோட்டில் கடந்த சில மாதங்களாக ரோடு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மத்திய அரசின் சார்பில் பொள்ளாச்சி உட்பட பல பகுதிகளில் நான்கு வழி அமைக்கும் திட்டம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு பல கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.இந்த திட்டம் செயல்படும் வரை பொள்ளாச்சி- கோவை ரோட்டை அகலப்படுத்துவதற்கு மாற்றாக ரோட்டை பராமரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த வாரம் துவங்கிய பணிகள் மழையின் காரணமாக நிறுத்தப்பட்டது. பொள்ளாச்சி- கிணத்துக்கடவு வரை உள்ள ரோடு பராமரிக்கப்பட்டு வருகிறது. ஓரிரு வாரங்களில் கோவை ரோடு பராமரிக்கும் பணிகள் முடியும், என்றனர்.


