/உள்ளூர் செய்திகள்/மதுரை/"பொட்டு' சுரேஷ், "அட்டாக்" பாண்டி, எஸ்ஸார் கோபி, வி.கே.குருசாமி ஆஜர்"பொட்டு' சுரேஷ், "அட்டாக்" பாண்டி, எஸ்ஸார் கோபி, வி.கே.குருசாமி ஆஜர்
"பொட்டு' சுரேஷ், "அட்டாக்" பாண்டி, எஸ்ஸார் கோபி, வி.கே.குருசாமி ஆஜர்
"பொட்டு' சுரேஷ், "அட்டாக்" பாண்டி, எஸ்ஸார் கோபி, வி.கே.குருசாமி ஆஜர்
"பொட்டு' சுரேஷ், "அட்டாக்" பாண்டி, எஸ்ஸார் கோபி, வி.கே.குருசாமி ஆஜர்
மதுரை : மதுரை தி.மு.க.,வினர் மீதான வழக்குகளில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் 'பொட்டு' சுரேஷ், எஸ்ஸார் கோபி, மாநகராட்சி மண்டல தலைவர் வி.கே.குருசாமி, மாஜி வேளாண் விற்பனைக்குழு தலைவர் 'அட்டாக்' பாண்டி ஆகியோர் கோர்ட்டில் ஆஜராயினர்.
மதுரை அண்ணாநகர் ஆடிட்டர் அமர்நாத் கொடுத்த நில அபகரிப்பு வழக்கில் பொட்டு சுரேஷ் பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.
திருமங்கலம் சிவனாண்டி - பாப்பா கொடுத்த நில அபகரிப்பு வழக்கில், எஸ்ஸார் கோபி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அவனியாபுரம் ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் கொலை வழக்கில் மதுரை ஆறாவது ஜெ.எம். கோர்ட்டில் கோபியை போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். அவரை, ஆக.,16 வரை ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் சுஜாதா உத்தரவிட்டார். கோபியை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு தாக்கல் செய்த மனுவுக்கு, பதிலளிக்க கோபி சார்பில் வக்கீல்கள் கோபால கிருஷ்ண லட்சுமணராஜ், மணிகண்டன், தனபால் கால அவகாசம் கோரினர். விசாரணையை ஆக.,4க்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
காமராஜர்புரம் செல்வராஜ் புகார்படி, வீடு, இடம் அபகரிப்பு வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் குருசாமி பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தேர்தல் முன்விரோதம் காரணமாக கீரைத்துறையை சேர்ந்த அ.தி.மு.க., 54வது வார்டு பிரதிநிதி மயில்முருகன் புகார்படி, வி.கே.குருசாமி மீது தெப்பக்குளம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் குருசாமியை போலீசார் மதுரை முதலாவது ஜெ.எம்.கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை, ஆக.,16ம் தேதி வரை ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் முத்துக்குமரன் உத்தரவிட்டார்.
தேர்தல் முன்விரோதம் காரணமாக தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சாகா ஸ்டாலின் புகார்படி, குருசாமி மீது கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் குருசாமியை போலீசார் ஆறாவது ஜெ.எம்.கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை, ஆக.,16ம் தேதி வரை ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் சுஜாதா (பொறுப்பு) உத்தரவிட்டார்.
கோவையை சேர்ந்த ஜெகதீசன் கொடுத்த நில அபகரிப்பு புகார்படி, 'அட்டாக்' பாண்டி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை, போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார், மதுரை முதலாவது ஜெ.எம்., கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். பாண்டியை போலீசார் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கின் தீர்ப்பை இன்று தள்ளி வைத்து மாஜிஸ்திரேட் முத்துக்குமரன் உத்தரவிட்டார்.
கரை வேட்டியை தவிர்த்த தி.மு.க.,வினர் : பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி, எஸ்ஸார் கோபி, வி.கே.குருசாமி ஆகியோரை மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். அவர்களை பார்க்க தி.மு.க.,வினர் பலர் கோர்ட்டிற்கு வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் கட்சி கரை வேட்டியை தவிர்த்திருந்தனர். ''தினமும் ஒரு பொய் வழக்குப் போடுறீங்க...'' என, இன்ஸ்பெக்டர் திருமால்அழகை பார்த்து இறுகிய முகத்துடன் குருசாமி கேட்டார். பதிலளிக்க விரும்பாத இன்ஸ்பெக்டர் முதலாவது ஜெ.எம்.கோர்ட்டிற்குள் சென்றார். யார், யார், எந்தெந்த வழக்குகளில் ஆஜராகின்றனர். வழக்குகளில் நிலை குறித்து அறிய உளவு பிரிவு போலீசார் அங்கும், இங்கும் பரபரப்பாக இயங்கினர்.


