ADDED : அக் 07, 2011 09:51 PM

சென்னை : இந்திய தபால் துறை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலக தபால் தினமான அக்., 9 முதல் 14ம் தேதி வரை, நாடு முழுவதும் தேசிய தபால் வார விழா கொண்டாடப்படுகிறது.
உலக தபால் தினம், சேமிப்பு தினம், தபால் தினம், தபால் தலை, வர்த்தக மேம்பாடு மற்றும் தபால் ஆயுள் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை விளக்கும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


