ADDED : அக் 12, 2011 01:39 AM
ஈரோடு: ஈரோடு தலைமை போஸ்ட் ஆஃபீஸில் இயங்கும் முதுநிலை அஞ்சல்
கண்காணிப்பாளர் அலுவலகத்தில், முதியோர் உதவித்தொகை மணியார்டர் குறைகேட்பு
நாள் கூட்டம், வரும் 18ம் தேதி காலை 11 மணியளவில் நடக்கிறது.முதியோர்
உதவித்தொகையை மணியார்டர் மூலம் பெறுவதில் ஏதேனும் குறைகள் இருப்பின்,
சம்பந்தப்பட்ட பயனாளிகள் கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் குறைகளை
விண்ணப்பமாக எழுதி தரலாம். கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாதவர்கள் தபால்
மூலம், 'பி.ஸ்டாலின், முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம்,
ஈரோடு-1' என்ற முகவரிக்கு, வரும் 18ம் தேதிக்கு முன்னதாக அனுப்பி வைக்க
வேண்டும்.
இத்தகவலை முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


